ஒவ்வொரு மாதமும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

ஒவ்வொரு மாதமும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  அலகுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது பயின்று வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  அலகுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாத இறுதியில் அலகு தேர்வு நடத்தப்படும். இதற்கு மாணவர்கள் – மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாளை பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

From around the web