கும்பமேளாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி... 15 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி!

 
கும்பமேளா


 
 

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில்   ஜனவரி 13ம் தேதி  மகா கும்பமேளா தொடங்கி  செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்  நேற்று ஜனவரி 28ம் தேதி செவ்வாய்க்கிழமை  மாலை நிலவரப்படி 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையான இன்று ஜனவரி 29ம் தேதி ஒரே நாளில் 10 கோடி போ் வரை புனித நீராட வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து  மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மௌனி அமாவாசை நீராடலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே பக்தா்களின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட அதிகரித்துகொண்டே இருந்தது. இந்நிலையில், மௌனி அமாவாசையை முன்னிட்டு இரண்டாவது அமிர்த ஸ்னானத்தில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்களும் குழந்தைகளும் உட்பட ஏராளமான பக்தர்கள் படுகாயம் அடைந்த   நிலையில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் விரைவாக அனுப்பப்பட்டன.

From around the web