அடங்காத ரீல்ஸ் மோகம்.. மலை பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்த இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
பூஜா

இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் பூஜா. தினசரி நிகழ்வுகளை கூட ரீல் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் அவருக்கு விருப்பம் அதிகம். தற்போது அவர் பள்ளத்தாக்கில் உருண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் நடந்த இந்த வைரல் வீடியோ, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில், ஒரு இளம் பெண் மலைகளுக்கு மத்தியில் ரீல் எடுக்க நடனமாடுவதைக் காணலாம். அந்த வீடியோவில், அந்தப் பெண் ஒரு பாறையில் நின்று தனது துப்பட்டாவை காற்றில் பிடித்துக் கொண்டு பாலிவுட் பாடலான 'பேபனா பியார் ஹை' பாடலுக்கு நடனமாடுகிறார். பள்ளத்தாக்கின் சீரற்ற பாதையில் குதித்து  நடனத்தைத் ஆடுகிறார். இதை அவரது தோழி செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், கீழே விழுந்த பூஜா, பிடியின்றி பள்ளத்தில் உருண்டு விழுந்தார். ரீல் மோகம் பூஜாவின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் பூஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதை கவனித்த காவல் துறை, “இதுபோன்ற அசம்பாவிதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம். ரீல் மோகத்தால் உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையை இழக்காதீர்கள் என்பது வேண்டுகோள்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web