தொடர்ந்து 12 மாதங்களுக்கு பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.. ரிசர்வ் வங்கி உத்தரவு!
தொடர்ந்து 12 மாதங்களுக்கு எந்தவிதமான பண பரிவர்த்தனையும் இல்லாமல், நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதே போன்று நீண்ட நாட்களாக எந்தவிதமான பண பரிவர்த்தனைகள் செய்யப்படாமல் ஜீரே பேலன்ஸ் வைத்திருக்கும் வங்கி கணக்குகளையும் முடக்க உத்தரவிட்டுள்ளது.
நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூடுவதற்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதனையடுத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்தாத கணக்குகளை 3 வகைகளாக பிரித்து அவற்றை மூட உள்ளன.
2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகளை பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப் படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக 12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை கணக்குகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, நீண்ட நாட்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ‘ஜீரோ பேலன்ஸ் கணக்கு’களை நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்திவைக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!