அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகளவில் பிரபரமான 'டிக் டாக்' செயலியை சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.
17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது. முன்னதாக டிக்டாக் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!