கோரிக்கை விடுத்தும் வெளியேறாத அமெரிக்க ராணுவப்படை.. ஈரான் மதத் தலைவர் குற்றச்சாட்டு!
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் அமெரிக்கப் படைகள் பல ஆண்டுகளாக ஈராக்கில் நிலைகொண்டுள்ளன. ஈராக்கிய அரசாங்கம் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அமெரிக்கா அங்கு தனது படைகளை நிறுத்தியுள்ளது. இந்த சூழலில், நேற்று முன்தினம் ஈரானுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்ற ஈராக்கியப் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, தலைநகர் தெஹ்ரானில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்தார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக சிரியாவின் நிலைமை குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய ஆயத்துல்லா அலி கமேனி, "ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. அரபு நாடுகள் இதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அமெரிக்கர்கள் ஈராக்கில் தங்கள் இருப்பை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
இந்த ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்றார். அதன் பிறகு பேசிய ஈராக் பிரதமர் சூடானி, காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கடுமையாகக் கண்டித்தார். காசா மற்றும் லெபனான் மக்களை ஆதரிப்பதில் தனது நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!