உஷார்! 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
உஷார்! 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!


வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது.

உஷார்! 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!


இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக கோயம்புத்தூர் , தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி,ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம்.

உஷார்! 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!



சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.செப்டம்பர் 13 முதல் 14 வரை வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உஷார்! 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

இதனால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் எண்ணூர் , நாகை, பாம்பன், தூத்துக்குடி , புதுச்சேரி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web