உஷார்! ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க இதை உடனடியா செய்ங்க!

உஷார்!  ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க இதை உடனடியா செய்ங்க!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் பொங்கல் பரிசு, கொரோனா நிவாரண நிதி ஆகியவை ரேஷன் அட்டைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை குடும்பத்தின் வருமானத்தினை பொறுத்து 5 வகையான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உஷார்!  ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க இதை உடனடியா செய்ங்க!

பிஎச்எச் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். பிஎச்எச் – ஏஏஒய் ரேஷன் கார்டிற்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். என்பிஎச்எச் ரேஷன் கார்டிற்கு அரிசி வழங்கப்படும். என்பிஎச்எச் – எஸ் ரேஷன்கார்டுதாரர்களுக்கு சர்க்கரை மட்டுமே. அரிசி கிடையாது.

உஷார்!  ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க இதை உடனடியா செய்ங்க!

என்பிஎச்எச் -என்சி ரேஷன் கார்டுதாரர்கள் அடையாள அட்டையாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுள்ளனர். அதில் குறிப்பிட்ட சிலர் ரேஷன்கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதே கிடையாது.

உஷார்!  ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க இதை உடனடியா செய்ங்க!

இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு உட்பட அனைத்து மளிகை பொருட்களும் தேக்கம் அடைந்து வருகின்றன. அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் அவைகளை சேகரிக்கும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் உடனடியாக ரேஷன் கடை அதிகாரிகளை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web