உஷார்!கொரோனாவிற்கு பிறகு உருவாகும் பாதிப்பு!

 
உஷார்!கொரோனாவிற்கு பிறகு உருவாகும் பாதிப்பு!

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொரோனா குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உஷார்!கொரோனாவிற்கு பிறகு உருவாகும் பாதிப்பு!

இந்த ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி 3 மாதங்களுக்குப் பிறகும், சிலருக்கு இன்னும் நீண்ட காலம் ஆன பின்னரும் நுரையீரலில் தொடர்ந்து பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நுரையீரல் பாதிப்பு வழக்கமான சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடிவதில்லை. இதனால் நோயாளிகளிடம் அவர்களது நுரையீரல் இயல்பாக இயங்குவதாக கூறப்படுகிறது.

உஷார்!கொரோனாவிற்கு பிறகு உருவாகும் பாதிப்பு!

இதுகுறித்த முழு தகவல்களும் ‘ரேடியலாஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகள், நீண்ட கால மூச்சு திணறலை அனுபவிக்கிறபோது, அவர்களது நுரையீரலும் இதுபோன்று சேதம் அடையக்கூடும்

கொரோனாவில் இருந்து மீண்டு 3 மாதங்களுக்கு பிறகும்கூட எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களில் நுரையீரலில் அசாதாரணமாக இருப்பது தெரிய வந்தது. சிலருக்கு, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து 9 மாதங்களான பின்னர் கூட இது தொடருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உஷார்!கொரோனாவிற்கு பிறகு உருவாகும் பாதிப்பு!

பல கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வந்து பல மாதங்களுக்குப் பிறகும் மூச்சு திணறலை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்களது சி.டி.ஸ்கேன் அறிக்கை நுரையீரல் இயல்பாக செயல்படுவதாகவே காட்டுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பெர்கஸ் க்ளீசன் உறுதி பட தெரிவித்துள்ளார்.

From around the web