உஷார்! இதனால தான் உங்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்?

 
உஷார்! இதனால தான் உங்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்?

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல விஷயங்கள் சவாலாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக பெரும் சவாலாக உள்ளது வீட்டிலேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளை சமாளிப்பது தான்.

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் நடவடிக்கைகள், சுபாவங்களை பின்பற்றியே வளருகின்றன. சில பெற்றோர் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தி விடுவார்கள்.

உஷார்! இதனால தான் உங்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்?

உறவினர்களிடம் தங்களை பற்றி பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். அதுதான் குழந்தைகள் பொய் சொல்ல கற்றுக்கொள்ளும் பிறப்பிடம். இதன் அடிப்படையிலேயே மற்றவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் சூழலுக்கு தக்கபடி பொய் பேசப் பழகி விடுகின்றன.

குழந்தைகள் பொய் சொல்வதை நிச்சயம் செய்து கொண்டு ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.
குழந்தைகள் பொய் சொல்லும்போது கண்களை நேரடியாக பார்த்து பேச தயங்குவார்கள். இதுதான் பொய் பேச தொடங்கும் ஆரம்பக்கட்டம். அதனை கண்டு கொள்ளாமல் விட்டால் வளர ஆரம்பித்ததும், கண்களை பார்த்தே பயமின்றி பொய் சொல்ல பழகி விடுவார்கள். பெற்றோர்கள் பொய் சொல்வதால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படலாம் என குழந்தைகளுக்கு கதைகள் மூலம் விளக்கி புரிய வைக்கலாம்.

உஷார்! இதனால தான் உங்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்?

குழந்தைகள் அவர்களுடைய வழக்கமான உடல் மொழி விட்டு பொய் பேசும்போது அவர்களின் செயல்பாடு முற்றிலும் மாறிப் போய்விடும். சொன்ன விஷயத்தையே, பயன்படுத்திய சொற்களையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பர். மூக்கு அல்லது தலையை சொறிந்த நிலையில் பேசுவர். இவையெல்லாம் பொய் சொல்வதற்கான அறிகுறிகள்.

உஷார்! இதனால தான் உங்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்?

குழந்தைகள் இதுநாள் வரை உபயோகிக்காத சைகைகளை திடீரென பயன்படுத்தினாலும் பொய் கூறுவதற்கான அறிகுறியே. வழக்கத்தைவிட கண்கள் சட்டென்று சுழன்று திருதிருவென்று முழிப்பார்கள். சமயத்தில் புன்னகையை வெளிப்படுத்தி, குறும்பாக சிரிக்கவும் செய்வார்கள். பதற்றமும், மன குழப்பமும் உண்டாகும். துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகள் வழக்கத்தைவிட அமைதியாக மாறத் தொடங்கினால் தவறு செய்கிறார்கள் என அர்த்தம். இவைகளை புரிந்து கொண்டு பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கலாம்.

From around the web