உஷார்! இந்த 11 ஆப்கள் இருந்தா உங்க மொபைலுக்கு ஆப்பு தான்!

 
உஷார்! இந்த 11 ஆப்கள் இருந்தா உங்க மொபைலுக்கு ஆப்பு தான்!


உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகம் அடைந்துள்ளது. அதற்கு இணையாக வளர்ச்சியை தடை செய்யும் வைரஸ்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது ஜோக்கர் மால்வேர் வைரஸ்.
மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. அவை தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும் கூட திருடுகின்றன.

உஷார்! இந்த 11 ஆப்கள் இருந்தா உங்க மொபைலுக்கு ஆப்பு தான்!


இந்த வைரஸ்கள் பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் க்ரைம் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். அதன்படி,
Free Affluent Message
PDF Photo Scanner
Delux Keyboard
Comply QR Scanner
PDF Converter Scanner
Font Style Keyboard
Translate Free
Saying Message
Private Message
Read Scanner
Print Scanne
இந்த ஆப்களில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட அதை உடனடியாக மொபைல் , லேப்டாப், கம்ப்யூட்டர்களில் இருந்து நீக்கி விடுவது நலம். இல்லையெனில் அவை மொத்த டேட்டாவையும் காலி செய்து விடும் அபாயம் உண்டு.

From around the web