உஷார்! உலகம் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்படும்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

 
உஷார்! உலகம் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்படும்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!


இன்று மக்கள் இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சூரிய காந்தப் புயல் நிகழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர் இதனால் உலகம் முழுவதுமே இண்டர்நெட் முடங்கும் அபாயம் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் வல்லுனர்கள்.

உஷார்! உலகம் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்படும்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

கலிபோர்னியா பல்கலைக்கழக்தின் உதவிப் பேராசிரியர் இது குறித்து ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் சூரிய காந்தப் புயலால் பெரிய அளவில் இணைய பாதிப்பு உலக அளவில் ஏற்படும் எனவும் , அந்த பாதிப்பு பல மாதங்கள் வரை நீடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் பூமியை நோக்கி பொழிவதே சூரிய காந்த புயல். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.ஆனால் செயற்கை கோள்கள் மற்றும் நீண்ட தூர கேபிள்களை சேதப்படுத்தலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் ஒரு நாள் இணைய சேவை துண்டிக்கப் பட்டால் அமெரிக்காவில் 7 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது

உஷார்! உலகம் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்படும்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

இதற்கு முன் இப்படி ஒரு புயல் 1859 முதல் 1921ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அப்போது இண்டர்நெட் வளர்ச்சி கிடையாது. ஆனால் பல மாதங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காந்த துகள்கள் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை பாதிக்காது.

இதன் மூலம் அமெரிக்கா – ஆசிய நாடுகள் இடையேயான இணைய தொடர்பை பாதிக்கப்படும். குறிப்பாக அமெரிக்கா அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற தீவு நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

From around the web