இஸ்ரோ புதிய தலைராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!

 
இஸ்ரோ நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11வது தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இஸ்ரோ நாராயணன்

கடந்த ஜனவரி 14 2022ல் இருந்து இஸ்ரோ தலைராக எஸ்.சோமநாத் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜனவரி 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் வரும் ஜனவரி 14ம் தேதியன்று பொறுப்பேற்கிறாா். அவா் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பாா். 

இஸ்ரோ தலைவர் சோமநாத்

திருவனந்தபுரம், வலியமலையில் அமைந்த இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநரான வி.நாராயணன், கரக்பூா் ஐஐடியில் பட்டம் பெற்றவா்.

ஏறக்குறைய 40 ஆண்டுகால அனுபவத்துடன் ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான 'சிஇ20 கிரையோஜெனிக்' என்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளாா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web