தேசிய சுகாதார திட்டத்தில் காலி பணியிடங்கள்... விண்ணப்பங்கள் வரவேற்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தற்போது காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை காலிப்பணியிடங்களை (Audiologist, Audiometric Assistant, Instructor for the young hearing impaired, FNA, MNA, Radiographer) மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக தற்காலிகமாக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் 25.11.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பபடிவம் கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் https://kanniyakumari.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் -629002 அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!