டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 103 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இதில் 72 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 31 கோடி பேர் 2வது தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களிலும் தாராளமாக கிடைக்கும் வகையில் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இதுகுறித்து மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தி உள்ளார். சில மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

From around the web