குமரியில் 2 நாட்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா... இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு... குவியும் சுற்றுலா பயணிகள்!

 
ஸ்டாலின் வள்ளுவர் குமரி கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கம்பீரமாக நிற்கும் வள்ளுவா் சிலை யின் வெள்ளி விழா கொண்டாட்டம் இன்று டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இன்றும் நாளையும் 2 நாட்களாக நடைபெற இந்த விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அப்போது வள்ளுவா் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

குமரி திருவள்ளுவர்

திருக்குறள் நெறிபரப்பும் 25 பேருக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் நாளின் இறுதி நிகழ்வாக, குறளை மையப்படுத்தும் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

கன்னியாகுமரி கடல்

முதல் நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.  இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் டிசம்பர் 31ம் தேதி தொடா்ந்து நடைபெறவுள்ளன. திருவள்ளுவா் தோரண வாயிலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா். அத்துடன் வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி உரையாற்றவுள்ளாா். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web