ஒரே நாளில் வருண் குமார் -வந்திதா பாண்டே தம்பதியருக்கு டிஐஜியாக பதவி உயர்வு... தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!
தமிழகம் முழுவதும் திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று டிசம்பர் 29ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி ஆக இருந்த வருண் குமார், டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். மொத்தம் 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பாராட்டப்பட்டு வரும் ஐபிஎஸ் தம்பதியரான வருண்குமார், வந்திதா பாண்டே ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்.பிக்களாக அருகருகே பணியாற்றி வந்த இருவரும் இனி முறையே திருச்சி - திண்டுக்கல் சரக டிஐஜிகளாக பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!