விசிக ஒன்றிய செயலாளர் மர்ம மரணம்.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!

 
சீனுவளவன்

திருவண்ணாமலை மாவட்டம், கொழப்பலூர் கூட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சீனுவளவன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். இந்நிலையில் சீனுவளவன் நேற்று முன்தினம் இரவு அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்ய சென்றார். அதன்பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

அதன்பின், அவரை தேடியபோது, ​​கொழப்பலூர் கொம்யூல் அருகே மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனுவளவன் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, வந்தவாசி-சேதுப்பட்டு சாலையில் உள்ள கொளப்பலூர் வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து சீனுவளவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web