அதிகாலையில் பயங்கரம்... காய்கறி லாரி கவிழ்ந்து 10 பேர் பலி, 15 பேர் படுகாயம்!

 
கர்நாடகா


 
கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பலியாகினர்.ஹாவேரி மாவட்டம் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்காக உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கும்தா சந்தைக்கு இன்று ஜனவரி 22ம் தேதி  புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.


எல்லப்பூர் நெடுஞ்சாலையில் குலாப்புரா கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்புறம் வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக காய்கறி லாரியை இடதுபுறமாக ஓட்டுநர் செலுத்தினார்.  

கர்நாடகா
இதில், நிலைதடுமாறிய லாரி சாலையோரம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அதிகாலை 4 மணிக்கு கோரவிபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் லாரியில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  மேலும், 15 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினருடன் இணைந்து மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web