நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு... தூத்துக்குடியில் பரபரப்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, கார் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபோல் டிஎம்பி காலனியில் சாலையோரம் நிறுத்தியிருந்த ரூரிஸ்ட் பஸ், மில்லர்புரம் கணேசன் காலனியில் 3ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ

இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் ஒரே பைக்கில் வந்த 3பேர் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?