மிக கனமழை... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷார்!!

இதற்கிடையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 11, 12-ம் தேதிகளில் மேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவான காற்று சுழற்சியாகவோ அல்லது தாழ்வுப் பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web