பிரபல திரைப்பட இயக்குநர் ஷாபி காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி!

 
ஷாபி

மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் ஷாபி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கி, ரசிகர்களின் பிரியமான இயக்குநராக வலம் வந்தவர் ஷாபி. 

தமிழில் 2005ல் விக்ரம், அசின் நடிப்பில் வெளியான மஜா திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் பிரபல மலையாள இயக்குனர் ஷபி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ஷாபி திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாகவும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என கண்காணித்து வந்தனர் அவரது மறைவு மலையாள திரையுலகிலும் அவரது படங்களை விரும்பி ரசித்த ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷபி

மலையாளத்தில் ஜனரஞ்சகமான கமர்சியலான அதேசமயம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை படம் முழுக்க சிரித்து பொழுதுபோக்க வைத்து அனுப்பும் இயக்குனர்களில் ஷபிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. அப்படி மலையாளத்தில் 'கல்யாணராமன், மாயாவி, சாக்லேட், சட்டம்பி நாடு, 2 கண்ட்ரிஸ்' என பல ஹிட் படங்களை இயக்கியவர் ஷபி. பெரும்பாலும் மம்முட்டி, திலீப், பிரித்விராஜ் நடித்த படங்களையே இவர் அதிகம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web