மூத்த பத்திரிகையாளர் பார்த்தசாரதி காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
பார்த்தசாரதி ஸ்டாலின்

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் இந்து பார்த்தசாரதி. இவர் தி இந்து குழுமத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவருக்கு வயது 86. இந்நிலையில்  உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


இவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய  ஒருவர்களில் திகழ்ந்த பார்த்தசாரதியின் மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் நீண்டகாலம் பணிபுரிந்தவர். ஆதாரபூர்வமான அரசியல் கட்டுரைகளை வாசகர்களுக்குத் தரும் ஆற்றல் படைத்தவர். அவர் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்த செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த மிகச் சிறந்த செய்தியாளர்  அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியிடம் விவாதிக்கும் மிகச் சில பத்திரிகையாளர்களில் பார்த்தசாரதி முக்கியமானவர்.  

பார்த்தசாரதி

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், “தி இந்து குழுமத்தில்” அவருடன் பணியாற்றியவர்களுக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web