இன்று திருப்பூர் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்... இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை!
இன்று தனது சொந்த மாவட்டமான திருப்பூருக்கு, தான் இந்திய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் வருகிறார்.
இன்று காலை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் அவர், இன்று மாலை திருப்பூரை அடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பாக உள்ள குமரன் சிலைக்கும், மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் ஷெரீப் காலனியில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்று தாயாரிடம் ஆசீர்வாதம் பெறவுள்ளார். அவரை வரவேற்க திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு இன்றும், நாளையும் திருப்பூர் மற்றும் காங்கயம் பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
