குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை!
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். செஷல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்கு வருகை தரவுள்ளார். கோவை விமான நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தமது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு வருவது இவரது முதல் பயணமாகும்.

கோவையில் கொடீசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதையடுத்து பேரூர் மடத்தில் நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாலை நேரத்தில் திருப்பூருக்கு புறப்படும் அவர், அங்குள்ள குமரன் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

புதன்கிழமை காலை திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறப்புவிழாவில் அவர் பங்கேற்பார். அதன் பிறகு மதுரைக்கு புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபடுவார். வியாழக்கிழமை காலை ராமநாதபுரம் சென்று பசும்பொன் தேவார் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மதுரைக்கு திரும்பி, அங்கிருந்து தனியார் விமானத்தில் தில்லி புறப்படுவதாக அவரது நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
