தெறிக்கவிடும் ரசிகர்கள் ...’ விடாமுயற்சி’ ப்ரீ புக்கிங்க்கில் சாதனை!

 
விடாமுயற்சி

 தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமாரின் 62வது படம் விடாமுயற்சி.  மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில்  ஜித்துக்கு ஜோடியாக ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த த்ரிஷா  இப்படத்திலும் இணைந்துள்ளார்.  லைகா நிறுவனம் தயாரிப்பில்  ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் அஜித்துடன் ஆரவ், அர்ஜுன், ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

விடாமுயற்சி

 
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் விடாமுயற்சி படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் அப்படத்திற்கான காட்சிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இப்படத்தை பிப்ரவரி 6ந் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளில ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்  அஜித் நடித்த வலிமை திரைப்படம் தான் தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அந்த சாதனையை விடாமுயற்சி படம் முறியடிக்க உள்ளது.

விடாமுயற்சி


இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம்  குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் மட்டும் இப்படம் ரூ.2.69 கோடியும்,  வெளிநாடுகளில் இப்படம் ப்ரீ புக்கிங் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.   இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி உள்ளதால், இப்படம் முன்பதிவிலேயே ரூ.25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web