பகீர் வீடியோ... இளைஞர்கள் மீது காரை மோதி 750 மீட்டர் இழுத்துச் சென்ற போதை ஆசாமி!

 
கார்

குஜராத் மாநிலம் மஹிசாஹர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது காரை மோதி அவர்களை பைக்குடன் சேர்த்து சுமார் 750 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

மோடாசா–லூனாவாடா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. காரை மது போதையில் இயக்கியதாகக் கூறப்படும் நபர், தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரு இளைஞர்கள் பயணித்த பைக்கை மோதியுள்ளார். அதன்பின் கார் பைக்குடன் இணைந்து தள்ளிச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் கார் கீழ் சிக்கி பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கார்

இதை பார்த்த அருகிலிருந்தோர் அதிர்ச்சியடைந்து உதவிக்கு விரைந்தனர். கார் நின்றதும், இருவரும் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து காட்சி அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு, அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிய போதை ஆசாமியை கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?