பகீர் வீடியோ... உயிரைப் பறித்த உடற்பயிற்சி.. பதைபதைத்த கூட்டம்!
பிரேசில் நாட்டில் உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்துகொண்டிருந்த 55 வயது நபர் ஒருவரின் நெஞ்சில் பார்பெல் எதிர்பாராதவிதமாக நழுவி விழுந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
☠️A Brazilian man lost control of a barbell and died right in the gym
— NEXTA (@nexta_tv) December 4, 2025
He was using an unsafe grip — without wrapping his thumb around the bar. It slipped, crashed onto his chest, and the impact caused his heart to stop.
👍Gym lovers, watch your thumbs — it might literally save… pic.twitter.com/mSEiq5vdqj
பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில், கடந்த மாதம் 1-ஆம் தேதி ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்பவர் பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கைகளில் இருந்து பார்பெல் நழுவி, நேரடியாக அவரது மார்பில் விழுந்தது. பார்பெல் விழுந்த உடனேயே அதைச் சிரமப்பட்டுப் பக்கவாட்டில் நகர்த்திவிட்டு அவர் எழுந்து நின்றார்.

ஆனால், சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஜிம் ஊழியர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மாண்டினீக்ரோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரைப் பறித்த இந்த விபரீதச் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ, உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
