மெட்ரோ ரயிலில் பயணிகளிடையே மோதல்... வைரலாகும் வீடியோ!
மெட்ரோ ரயிலில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Delhi Metro me aapka Swagat hai
— Nature Explorer (@Patel45Nature) October 5, 2025
😎🤙🏻🤙🏻🤙🏻😅#delhiMetro#delhi#Indian pic.twitter.com/5AJNQbjCUb
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இடையே நடந்த மோதல் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மெட்ரோ ரயில் சென்று கொண்டிருக்கும் போது அதில் இருந்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
