விஜய் தவெக மாநாடு... விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
மாநாட்டிற்கு இரு சக்கர வாகனங்களில் வராதீங்க என்று நடிகர் விஜய் மாநாடு தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அறிவுறுத்தி வந்தார். ஆனால், ரசிகர்கள் விஜய் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருசக்கர வாகனங்களில் கிளம்பிச் சென்று மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.
நேற்று அதிகாலை சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பியவர்கள் சென்னை தேனாம்பேட்டை அருகே விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக ஒருவர் பலியானார்.
அதே போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காலையிலேயே மாநாட்டில் குவிந்தனர். இவர்கள் கடும் வெயிலில் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் தவெக மாநாட்டில் சரிந்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்த 80க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதே போன்று தாம்பரத்தில் விஜய் ரசிகர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சியில் நடந்த சாலை விபத்தில் த.வெ.க நிர்வாகிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரயிலில் வந்த ரசிகர்கள் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து நேரே மாநாடு பகுதிக்கு அருகே கீழே குதிக்க முற்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!