ஈரோட்டில் விஜய் பிரச்சாரத் தேதி திடீர் மாற்றம்... 84 நிபந்தனைகள் கொண்ட பட்டியல்?!

 
தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் அவர்கள் ஈரோட்டில் மேற்கொள்ளவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தேதி, காவல்துறையின் கடும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப் போதிய கால அவகாசம் இல்லாததால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஜய் பிரச்சார தேதி டிசம்பர் 18 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தவெக

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 16 அன்று விஜய் பிரச்சாரம் செய்யத் த.வெ.க.வினர் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது, காவல்துறையின் சார்பில் 84 நிபந்தனைகள் கொண்ட ஒரு நீண்ட பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

தவெக

இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குப் போதிய அவகாசம் இல்லாத காரணத்தால், த.வெ.க.வினர் தங்கள் கட்சியின் பிரச்சாரத் தேதியை டிசம்பர் 16-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 18-ஆம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!