அலுவலகத்தில் விஏஓ-வை வைத்து பூட்டி சென்ற கிராம நிர்வாக உதவியாளர்.. பின்னால் இருந்து கதறும் அதிகாரி!

 
சங்கீதா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வடகனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர்கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார்.  சங்கீதா அதே அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விஏஓ தமிழரசி அலுவலகத்திற்குள் இருந்தபோது சங்கீதா அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.


அப்போது அலுவலகத்திற்குள் இருந்த விஏஓ தமிழரசி, சங்கீதா அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றபோது வீடியோவாக எடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஏஓ தமிழரசி எடுத்த வீடியோவில், சங்கீதா அலுவலகத்திற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நோக்கி செல்வது தெரிகிறது. ஜன்னல் வழியே வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த தமிழரசி, `அலுவலகத்தை பூட்டிக்கொண்டு எங்கே போகிறாய்...? ஒரு அதிகாரியை பூட்டி செல்வது எப்படி நியாயம்?

இந்த வீடியோவை தாசில்தாருக்கு அனுப்பி வச்சி உன் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லுறேன் என்று  பின்னால் பேசியிருந்தார். ஆனால் சங்கீதா இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web