சந்தோஷங்களை அள்ளித் தரும் சங்கடஹர சதுர்த்தி... வழிபாடு முறை, பலன்கள்!
நாம் தொடங்கும் அனைத்து செயல்களில் இருக்கும் விக்னங்களை தீர்த்து அவை முழுமையாக நிறைவு பெறச் செய்பவர் முழு முதற்கடவுள் விநாயகர். நவக்கிரகங்களில் நாம் எந்த கிரகத்தின் பிடியில் இருந்தாலும் எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபடச் செய்வார் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. எல்லா நாட்களிலும் விநாயகரை வழிபடலாம் என்றாலும் பௌர்ணமியை அடுத்த சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டு வர வாழ்வின் அனைத்து சங்கடங்களும் நீங்கி மேன்மையான, வளமான வாழ்வை பெறமுடியும் என்பது ஐதீகம். சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும் .
சங்கடஹர சதுர்த்தியன்று வீட்டில், விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி, வழிபாடு செய்து விரதத்தை தொடங்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு சமைத்த உணவை தவிர்த்து மாலை வரை உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை உணவை எடுத்துக் கொள்ளலாம். மாலை கோவில் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அருகம்புல் சார்த்தி சங்கல்பம் செய்து விநாயகரை எட்டு முறை வலம் வருதல் (பிரதட்சிணம்)வேண்டும்.
பின்பு விளக்கேற்றி பிரார்த்தனை நிறைவேற வழிபாடு செய்ய வேண்டும். அதன் பின்பே வீட்டிற்கு வந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று சங்கடஹர சதுர்த்திகளைத் விரதமிருந்து வழிபட்டு வந்தால், அனைத்து சங்கடங்களும், வாழ்வின் இன்னல்களும் தீர்ந்து விடும்.
இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.மேலும் மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடிவதுடன் சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு. சங்கட ஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்வோம். சங்கடங்கள் யாவையும் நீங்கப்பெற்று வளமான வாழ்வு பெறுவோம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!