பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த வன்முறை.. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பாதுகாப்புப் படையினர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மேகினில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று காலை 30 பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதில், பாதுகாப்புப் படையினர் 16 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. அதாவது இரு தினங்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பதில் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!