பள்ளி வளாகத்தில் நடந்த கொடுமை.. மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் ஆசிரியர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கஞ்சபெத் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் தேஜஸ்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆசிரியையாக பணிபுரிகிறார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இந்நிலையில், தனது வகுப்பில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவனுக்கு ஆசிரியர் ஆசையை வளர்த்துள்ளார். இதையடுத்து, மாணவனிடம் தேஜஸ்வி நெருக்கமாக பழகி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பள்ளி வளாகத்தில் மாணவனுடன் ஆசிரியை உடலுறவு கொண்டார். இதனால் விரக்தியடைந்த மாணவர் வீட்டில் சோகத்துடன் இருந்தார். இதை கவனித்த மாணவனின் பெற்றோர், மகனிடம் விசாரித்தனர். அப்போது மாணவன் கதறி அழுது நடந்த அனைத்தையும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாணவனுடன் உடலுறவு கொண்டது உறுதியானது. இதையடுத்து ஆசிரியை தேஜஸ்வியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமின்றி, ஆண் குழந்தைகளின் பெற்றோர்களும் தற்போது அச்சத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!