மணிப்பூரில் மீண்டும் வன்முறை... தமிழக காவலர் மீது தாக்குதல்... படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
![மணிப்பூர்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/b5303611828e9faeadfe1aabb8a708ae.jpg)
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்க துவங்கியுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி மக்கள், தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரி, 2023ல் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைதிப் பேரணி வன்முறையாக மாறியது. பின்னர் மணிப்பூர் வன்முறைக் காடாக மாறியது. இந்த வன்முறை கலவரம் மற்றும் தீவைப்பு சம்பவங்களுக்கு வழிவகுத்தது. சில நாட்களாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் பலர் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தனர். மேலும், பெண்களை நிர்வாணமாக்கி வீதிகளில் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால், இந்த வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று முன் தினம் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில், பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து, பழங்குடியினப் பகுதிகளில் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சில போலீசாரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தற்போது வரை பதற்றம் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!