திருப்பதியில் இன்று முதல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து... நாளை ரத சப்தமிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

 
திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

நாளை பிப்ரவரி 4ம் தேதி ரதசப்தமி விழாவையொட்டி திருப்பதி திருமலையில், இன்று பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதியில் சமீபத்தில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை பிப்ரவரி  4ம் தேதி ரதசப்தமிக்காக  மினி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.  இந்த நாளில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் உலா வருகிறார்.

திருப்பதி

நாளை பிப்ரவரி 4ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும்,  பின்னர் காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், அதன் பின்னர் 11 மணி முதல் - 12 மணி வரை கருட வாகனத்திலும் பிற்பகல்  1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து பிற்பகல்  2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும்.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6- 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

ரதசப்தமி நடைபெறுவதையொட்டி திருமலை திருப்பதி கோயிலில் இன்று பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 5  தேதி வரையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் இலவச தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web