வைரல் வீடியோ... பூரி ஜெகந்நாதர் கோவிலில் கொடியுடன் பறக்கும் கழுகு…? பக்தர்கள் பரவசம்!

 
 கொடியுடன்  பறக்கும் கழுகு

ஒடிசா மாநிலம் பூரி  ஜெகன்நாதர் கோவிலில் கழுகு ஒன்று  புனித கொடியை பிடித்துக் கொண்டே பறக்கும் வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பூரி பகுதியில் திடீரென ஏற்பட்ட புயலுக்குப் பிறகு நடந்ததாக தெரிகிறது.
இது குறித்து  நேரில் பார்த்தவர்கள்  அந்த கழுகு முதலில் கோவிலின் மேற்கு வாசலை நோக்கிச் சென்றதாகவும், பின்னர் கடலுக்குப் பறந்ததாகவும் தெரிவித்தனர். அந்த கழுகின் கண்கவர் பறக்கும் காட்சி, அது பிடித்திருந்த துணி கோவிலின் கொடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  



இது உண்மையில் ஜெகந்நாதர் கோவிலின் கொடியா, இல்லை புயலால் பறந்த துணியா என்பது குறித்து கோவில் நிர்வாகத்திடம் இருந்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும், அந்த வீடியோவில் காணப்படும் காட்சி பலரை ஆன்மீக உணர்வில் ஆழ்த்தி உள்ளது.
சிலர், கழுகை ஹிந்து புராணத்தில் விஷ்ணுவை ஏந்தும் கருடனுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். நெட்டிசன்களில் மேலும் சிலர்  இது ஒரு தெய்வீக செய்தியாக இருக்கலாம். உலகம் முழுவதும் ஜெகந்நாதரின் ஆற்றல் பரவுவதற்கான அறிகுறியாக பார்க்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளனர். மறுபுறம், சிலர் இது ஒரு அபசகுனம் என்றும், துயரம் நிகழக்கூடிய எச்சரிக்கையாகக் கருதுகிறோம் எனவும்  கருத்து தெரிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web