சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி: சர்வதேசப் போட்டிகளில் புதிய மைல்கல்!

 
விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இந்தத் தொடரில் தொடர் நாயகன் (Player of the Series) விருது வென்றதன் மூலம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து, சர்வதேசப் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ரோஹித் - கோலி ரோகித்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் (116 ரன்கள்) மற்றும் விராட் கோலி (65 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

விராட் கோஹ்லி

இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள்:

விராட் கோலி - 20 விருதுகள்

சச்சின் டெண்டுல்கர் - 19 விருதுகள்

ஷாகிப் அல் ஹசன் - 17 விருதுகள்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!