பூனையுடன் கொஞ்சி விளையாடும் விராட் கோலி..! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
பூனையுடன் கொஞ்சி விளையாடும் விராட் கோலி..! வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

தற்போது இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் பயிற்சி செய்து வருகிறார். இதற்கான புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.


அந்த பதிவில் அவர் கையில் பூனை ஒன்றுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறார். இந்த பதிவிற்கு அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமிலேயே பதில் அளித்துள்ளார்.விராட் கோலியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web