கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நிற்கும் தொண்டர்கள்.., தவெக பூத் கமிட்டியில் பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

 
 கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நிற்கும் தொண்டர்கள்.., தவெக பூத் கமிட்டியில் பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தவெகவின்  பூத் கமிட்டி கருத்தரங்கம் குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில்   நடைபெற்று வருகிறது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 16,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

தவெக தலைவர் விஜய் இரு நாட்களும் பிற்பகல்  3 மணிக்கு கருத்தரங்கில் பங்கேற்று நிர்வாகிகளிடையே உரையாற்றுகிறார். இந்த நிலையில், கடும் வெயிலிலும் காலை முதலே குவிந்து வருகிறார்கள் தவெக தொண்டர்கள். வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் நின்று இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விடுதி ஊழியர்களும் காவல்துறையினரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.  இருப்பினும் வழி விடாமல் ”TVK..TVK..TVK” என தொண்டர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள்.

கருத்தரங்கத்தில் கட்சி துண்டு மற்றும் செல்போன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் பாஸ் உள்ளவர்களுக்கு  மட்டுமே நுழைவு அனுமதிக்கப்பட்டது. இதனிடையே, கருத்தரங்கம் நடைபெறும் வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காக தவெக நிர்வாகிகள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web