முதல்ல ஓட்டு போட்டுட்டு அப்புறமா சாப்பிடுங்க... பிரதமர் மோடி வேண்டுகோள்!

 
மோடி

 தலைநகர் டெல்லியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிஜேபி என மும்முனை போட்டி நிலவுகிறது.  1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 டெல்லி முழுவதும் 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு  வாக்குப்பதிவு   மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு பிரதமர்   மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்தல்


அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் "இந்த ஜனநாயகத் திருவிழாவில் தில்லி வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள். இதனை நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்" என பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web