ஜம்மு - காஷ்மீர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... அக்டோபர் 8 முடிவுகள் அறிவிப்பு!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
#WATCH | A West Pakistani refugee says, "We are celebrating as we are exercising our right to vote for the first time. People from the West Pakistani refugee community have never exercised their right to vote before. This is a gift given to us by PM Modi..." https://t.co/V3kJuqAHZb pic.twitter.com/e5776JhRw4
— ANI (@ANI) October 1, 2024
90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த செப்டம்பர் 25ம் தேதி 26 தொகுதிகளில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவுற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக எடுத்து செல்லும் பணியில் தேர்தல் அதிகாரிகள், ராணுவத்தினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!