எச்சரிக்கை ! குழந்தைகளிடையே அதிகரிக்கும் கொரோனா!

 
எச்சரிக்கை ! குழந்தைகளிடையே அதிகரிக்கும் கொரோனா!


இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது 3வது அலையாக இருக்கலாமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எச்சரிக்கை ! குழந்தைகளிடையே அதிகரிக்கும் கொரோனா!

தற்போதைய பாதிப்புக்களில் 100க்கு 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் ஏற்படும் மாற்றம் கண்டு அஞ்சத்தேவையில்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு பாதிப்பிலிருந்து மீள மீள அது குழந்தைகளைத் தொற்றுவது லேசாக அதிகரித்து வருகிறது.

எச்சரிக்கை ! குழந்தைகளிடையே அதிகரிக்கும் கொரோனா!

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குழந்தைகள் பாதிப்பு கோவிட் எண்ணிக்கைகளின் படி மிசோமில் மொத்த பாதிப்புகளில் 16.48% 10 வயதுக்கும் கீழான குழந்தைகள். இதே தலைநகர் டெல்லியில் 2.25% ஆக உள்ளது.
முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. செரோ சர்வேயின்படி குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 58% ஆக அதிகரித்து இருப்பதாக மற்றொரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web