செல்வ வளம் கொழிக்கச் செய்யும் ஆடிச் செவ்வாய்!

 
செல்வ வளம் கொழிக்கச் செய்யும் ஆடிச் செவ்வாய்!


ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் . ஆடி மாதத்தின் எல்லா நாட்களுமே அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாட்கள் என்ற போதிலும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது பழமொழி.ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட வேண்டும்.

செல்வ வளம் கொழிக்கச் செய்யும் ஆடிச் செவ்வாய்!

பின்பு வீட்டையோ அல்லது பூஜையறை மட்டுமாவது நீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். பழங்கள் அல்லது பாலை இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம்.இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து தூபமிட்டு பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்யலாம்.

இந்த தருணத்தில் குல தெய்வத்தை வணங்கி விரதத்தை தொடங்கலாம். இந்த நாளில் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது மிகவும் நல்லது. முழு தினமும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம்.
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்கு விரதம் இருக்க வேண்டிய நாள். இந்த நாளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள் நீங்கும்.

செல்வ வளம் கொழிக்கச் செய்யும் ஆடிச் செவ்வாய்!

மேலும் திருமணத்தடை, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் ஆடி செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருக்க தடை நீங்கி திருமணம் கைகூடும். குழந்தைப்பேறு கிட்டும். மேலும் இந்த நாளில் மஞ்சள் பூசிக் குளித்து விரதம் அனுஷ்டித்து அம்மனையும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.இது தவிர மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஆடிச்செவ்வாயில் நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இதனால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்பது ஐதிகம்.

From around the web