நாளை முதல் கனமழை... வெதர்மேன் ரிப்போர்ட்!

 
வெதர்மேன்

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “அக்டோபர் 15 முதல் 18 வரை மழை தீவிரம் அதிகரிக்கும். கடலிலிருந்து கேடிசிசி பகுதிக்குள் மேகங்கள் நகர்வது அழகான காட்சி. சிறிய மேகங்களே கூட 20–30 மிமீ மழையைப் பொழிக்கும். எனவே கடலோர மாவட்டங்களில் குடை, ரெயின்கோட்டை எடுத்துச் செல்லுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

கன மழை

இதேபோல், டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தனது எக்ஸ் பதிவில், “அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க நிலை மழைப்பொழிவு பற்றிய விரிவான கட்டுரை  பத்திரிகையில் வெளியாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

கனமழை பெருவெள்ளம் வெள்ளம் மழை

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: இன்று தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதி, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?