களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அதே நேரத்தில் ராஜ்ய சபா எம்பி தேர்தலும் நடத்தப்பட உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் ஏற்கனவே வகித்து வந்த ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.

களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!


இதனால், தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இந்த 2 இடங்களுக்கும் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த 2 இடங்களுக்கான வேட்பாளர்களை ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!


அதன்படி, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த என்.வி.என்.சோமுவின் மகளான டாக்டர் கனிமொழியையும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரையும் திமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.
2016ல் திநகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் டாக்டர் கனிமொழி. நாமக்கல் ராஜேஷ்குமார், திமுகவின் முன்னாள் எம்எல்ஏ ராமசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web