14 வருஷமா போராடுறோம்... பாஜகவின் ஏ டீம் திமுக.... சீமான் பேட்டி!

 
சீமான்
 

பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், ஏ டீம் திமுக தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். 

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், “நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் நிலவி வரக்கூடிய தீய அரசியலை மாற்றி தூய அரசியல் அமைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.

தமிழக பாஜக

இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வராமல் இருப்பது, மக்களை பற்றி கவலை படாமல் இருப்பது, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு பெறுவது, ஓட்டை விற்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும் போது சிந்திப்பார்கள். 

சீமான் பின்னால் இருப்பவர்கள் எந்த அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தாய்மார்கள் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெண்கள் கையேந்தினால் அது புரட்சி பெண்ணா வறட்சி பெண்ணா. திராவிடம் என்று எந்த வழியில் பொருள் கொண்டாலும் திருடன் என்று தான் பொருள் வருகிறது. 

ஸ்டாலின்

திராவிடம் தீராத கொடிய விஷம். நூறு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பது தான் தேர்தல் அரசியல். 45 ஆயிரம் கோடி சாராய விற்பனை தேர்தல் அரசியல், தாலிக்கு தங்கம் தேர்தல் அரசியல், இந்த தேர்தல் அரசியலை தீ வைத்து கொளுத்தி விட்டு கட்சி அரசியல் நோக்கி மக்கள் செல்வது தான் இந்த மண்ணுக்கு தேவையான தூய்மையான அரசியல்.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி எப்படியெல்லாம் பாலியல் கொடுமை குறித்து அளித்த வாக்கு மூலம் மாணவி எப்ஐஆர் குறித்து வெளியிட்டது தான் திருட்டு திராவிடம். இத்தனை எப்ஐஆர் இருக்கும் நிலையில் மாணவி நகல் மட்டும் இணையதளத்தில் இருந்து கசிந்து வெளியானது எப்படி?

அந்த சார், எந்த சார் என்று ஏதாவது விசாரித்து இந்த அரசு வெளியிட்டுள்ளதா? போராட வந்த பாமக சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியா, பாஜக குஷ்பு ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அப்போது ஞானசேகரன் குற்றவாளியா? அரசு குற்ற வாளியா? என் வீட்டை 15 நாட்களுக்கு முற்றுகை செய்ய அனுமதி அளித்தது ஏன்? பெரியாரை வேண்டு மென்று விமர்சனம் செய்ய வில்லை. பெரியார் வேண்டாம் என்று தான் விமர்சனம் செய்கின்றேன்.

பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள். ஆனால் பெரியார் பேசியதை பேச மறுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் தென் மாநில கிளையை பெரியார் தலைமையில் உருவாக்கியது. சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் போல பாஜக, ஆர்எஸ்எஸ், பெரியார் ஆகியோர் சிறையில் இல்லை.

என்னை ஒன்று தான் செய்ய முடியும். வழக்கை போடலாம். சிறையில் போடலாம் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கூட்டத்தில் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதிக்கப்பட்டவன் போறானா? பணம் போகிறதா என்று தெரியவில்லை.

இப்போது தமிழகத்தில் பணம் இப்படி தான் போகிறது. இன்னும் ஒன்றை ஆண்டுகளில் 2026ம் ஆண்டு புதிய அரசியல் படைப்போம். இனி என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. சட்ட நகல் எரித்த பெரியார் நவம்பர் 26ம் தேதி திமுக சட்ட நகல் எரிப்பு நாள் என்று கொண்டாடி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடு வதை திசை மாற்றுகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும் போது திமுக குதிப்பது என்ன? இந்த நடைமுறையை ஆதரித்து பேசியது திமுகவின் தலைவராக இருந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தான் ஓரே நாடு ஓரே தேர்தல் வரவேற்று பேசினார். ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஒரே நாடு, ஓரே மதம், கட்சி ஆகிய கோட்டுப்பாடுகளை வரவேற்று பேசியவர் பெரியார்.

ஓரே நாடு, ஓரே கட்சி, ஓரே மதம், வேண்டும் என்று பெரியார் எழுதியது இருக்கிறது. பாஜக பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், அப்போது ஏ டீம் யாரு, அது திமுக தான். அதனால் அதை ஒழிக்க வேண்டும். 5 நேரம் தொழும் இஸ்லாமிய மக்கள் தொழும் போது ஒருமுறை ஒரு நொடியில் எங்களுக்காக வெற்றி பெற துவா செய்யுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web