ரூ.12 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் கடத்தல்.. கையும் களவுமாக சிக்கிய நபர்.. வனத்துறை அதிரடி!

 
ராஜேந்திரன்

திருப்பூரில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சங்களை கடத்திய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் திமிங்கல எச்சங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, மாவட்ட வன அதிகாரியின் உத்தரவின் பேரில், திருப்பூர் வன அதிகாரி, திருப்பூர் வனத்துறை ஊழியர்களுடன் சேர்ந்து, கணபதிபாளையத்தில் உள்ள ராஜேந்திரனின் வெல்டிங் பட்டறையில் சோதனை நடத்தினர். அங்கு திமிங்கல எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

திமிங்கல எச்சம்

திமிங்கல எச்சங்களை வைத்திருந்த ராஜேந்திரனை (52) இன்று வனத்துறை கைது செய்தது. இந்த எச்சங்களின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. சிவகாசியில் உள்ள ஒருவரிடமிருந்து அதை வாங்கியதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். இந்த எச்சங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டன என்பது குறித்து வனத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web