கார் வாங்கப் போனவர் மாடியில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ !!

 
கார் வாங்கப் போனவர் மாடியில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ !!

சம்பாதிக்கும் அனைவருக்கும் விரைவில் புதுகார் வாங்க வேண்டும் என்பது கனவாக உள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர் ஒருவர் தெலுங்கானாவில் ஷோரூமில் இருந்து புதிய காரை டெலிவரி எடுக்க வந்தார். இவரின் மிகுதியான ஆசையால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து காருடன் தலைகுப்புற விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹைட்ராலிக் லிப்ட் மூலம் காரை பணியாளர்கள் இறக்கியுள்ளனர்.
அப்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கார் கீழே விழுந்ததில் புத்தம் புது கார் 1 மற்றும் 4 பைக்குகள் நொறுக்கின. காரில் இருந்து காயமடைந்த வாடிக்கையாளர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய காருடன் வீட்டிற்கு வருவார் என ஆவலுடன் காத்திருந்த உறவினர்கள், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை வீடியோவாக எடுத்த ஷோரூம் பணியாளர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

From around the web